வேலூர், காட்பாடி பகுதிகளில் 27-ந்தேதி மின்நிறுத்தம்
வேலூர், காட்பாடி பகுதிகளில் 27-ந்தேதி மின்வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர்,
திருவலம் துணை மின்நிலையத்தில் மின்உபகரணங்கள் பழுது அடைந்துள்ளன. அதனை மாற்றும் பொருட்டு மின்பராமரிப்பு பணிகள் 27-ந் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. எனவே வேலூர், காட்பாடி கோட்டத்துக்கு உட்பட்ட வேலூர், சத்துவாச்சாரி, காட்பாடி, வடுகந்தாங்கல் துணை மின்நிலையங்களில் மின்வினியோகம் இருக்காது.
அதனால் வேலூர் புதிய, பழைய பஸ் நிலையங்கள், தோட்டப்பாளையம், சலவன்பேட்டை, ஊசூர், கொணவட்டம், பொய்கை, செதுவாலை, சத்துவாச்சாரி, வள்ளலார், அலமேலுமங்காபுரம், காகிதப்பட்டறை, பி.கே.புரம், கே.வி.குப்பம், மேல்மாயில், வடுகந்தாங்கல், பசுமாத்தூர், பள்ளத்தூர், பனமடங்கி, காளாம்பட்டு, மாளியப்பட்டு, செஞ்சி, லத்தேரி, திருமணி, காந்திநகர், செங்குட்டை, காட்பாடி, கல்புதூர், காங்கேயநல்லூர், வண்டறந்தாங்கல், கழிஞ்சூர், கிறிஸ்டியான்பேட்டை, பழைய காட்பாடி, பள்ளிகுப்பம், வடுகன்குட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுனில் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story