கும்மிடிப்பூண்டியில் இலங்கை அகதியை தாக்கிய வாலிபர் கைது


கும்மிடிப்பூண்டியில் இலங்கை அகதியை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 May 2020 4:15 AM IST (Updated: 26 May 2020 2:30 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியில் இலங்கை அகதியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமை சேர்ந்தவர் காந்தரூபன் (வயது 40). இவரது உறவினர் விக்னேஷ்வரன் (35). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு காந்தரூபனை வழிமறித்து விக்னேஷ்வரன் மற்றும் அவரது நண்பரான மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த காந்தரூபன் சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை (25) நேற்று கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விக்னேஷ்வரன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story