மந்திரி அசோக் சவானுக்கு கொரோனா


மந்திரி அசோக் சவானுக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 May 2020 11:58 PM GMT (Updated: 25 May 2020 11:58 PM GMT)

மந்திரி அசோக் சவானுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை, 

மராட்டிய மாநிலத்தில் கொடிய கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. இ்ங்கு பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து உள்ளது. பொதுமக்கள் தவிர போலீசார், சுகாதார பணியாளர்கள், பெஸ்ட் ஊழியர்கள், மத்திய படை வீரர்கள் என பல தரப்பினரையும் ெதாற்று தாக்கி உள்ளது.

இந்தநிலையில் கடந்த மாத இறுதியில் மராட்டிய மாநில வீட்டு வசதித்துறை மந்திரி ஜிதேந்திர அவாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.

இந்தநிலையில் மாநில பொதுப்பணித்துறை மந்திரியும், முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் சவான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரான இவர் நாந்ெதட் மாவட்டத்ைத ேசர்ந்தவர்.

இவர் பணி நிமித்தமாக மும்ைப-நாந்ெதட் இடைேயஅடிக்கடி பயணித்து உள்ளார்.

அதன்படி சில நாட்களுக்கு முன் மும்பை வந்துள்ளார். அதன்பிறகு நாந்தெட் திரும்பிய அவர் ெகாேரானா அறிகுறியுடன் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதையடுத்து நடந்த பரிசோதனையில் மந்திரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மந்திரி நாந்தெட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மராட்டியத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது அரசியல் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story