மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 97 பேர் பலி; மும்பையில் மேலும் 1,000 பேருக்கு தொற்று உறுதி + "||" + 97 Corona deaths in one day in Maharashtra; More than 1,000 people infected in Mumbai

மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 97 பேர் பலி; மும்பையில் மேலும் 1,000 பேருக்கு தொற்று உறுதி

மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 97 பேர் பலி; மும்பையில் மேலும் 1,000 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் 97 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மும்பையில் மேலும் 1,002 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாட்டில் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 3-ல் ஒரு பங்குக்கு மேற்பட்டவர்கள் மராட்டியத்தை சேர்ந்தவர்களாக உள்ளனா். இந்தநிலையில் மாநிலத்தில் நேற்று மேலும் 2 ஆயிரத்து 91 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 54 ஆயிரத்து 758 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மாநிலத்தில் ஒரேநாளில் 97 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். மராட்டியத்தில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,792 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல 16 ஆயிரத்து 954 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 36 ஆயிரத்து 4 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையை பொறுத்தவரை நேற்று மட்டும் புதிததாக 1,002 பேருக்கு பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகரில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 974 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல மேலும் 39 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் 28 பேர் ஆண்கள். 11 பேர் பெண்கள். மும்பையில் இதுவரை 1,065 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். 8 ஆயிரத்து 814 பேர் குணமாகி உள்ளனர்.

மும்பையில் கொரோனா சிகிச்சை மையங்கள், ஆஸ்பத்திரிகளில் உள்ள 13 ஆயிரத்து 23 படுக்கைகளில் 82 சதவீதமும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 4 ஆயிரத்து 116-ல் 63 சதவீதமும், அவசர சிகிச்சை பிரிவில் உள்ள 644 படுக்கைகளில் 96 சதவீதமும், வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய 359 படுக்கைளில் 66 சதவீதமும் நிரம்பி உள்ளதாக மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

மராட்டியத்தில் மற்ற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புகுறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி - 2,866 (52 பேர் பலி), தானே புறநகர் - 484 (5), நவிமும்பை மாநகராட்சி - 2,154 (32), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 989 (18), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 198 (6), பிவண்டி மாநகராட்சி - 99 (3), மிரா பயந்தர் மாநகராட்சி - 525 (10), வசாய் விரார் மாநகராட்சி - 630 (15), ராய்காட் - 471 (5),

பன்வெல் மாநகராட்சி - 374 (12). மாலேகாவ் மாநகராட்சி - 722 (47). புனே மாநகராட்சி - 5,602 (268), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி - 350 (7), சோலாப்பூர் மாநகராட்சி - 621 (47), அவுரங்காபாத் மண்டலம்- 1,541 (54), நாக்பூர் மாநகராட்சி - 472 (8).

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 9 பேர் பலியானார்கள்.
2. வடகொரியாவில் கொரோனா வைரசா? - மிகுந்த விழிப்புடன் இருக்க கிம் ஜாங் அன் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் விவகாரத்தில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகளை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் எச்சரித்தார்.
3. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை
இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயாராகி உள்ளது. சுதந்திர தினம் முதல் பொதுமக்களுக்கு போட அதிவேக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் முதல் கட்ட பரிசோதனைக்கும் ஏற்பாடு ஆகிறது.
4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டது; ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது.
5. பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,21,896 ஆக உயர்ந்துள்ளது.