பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
புதுவை முத்தியால்பேட்டை அன்பு ரஜினி உள்பட பல்வேறு கொலை வழக்கில் தொடர்புடையவர் பிரபல ரவுடி சோழன்.
புதுச்சேரி,
இதற்கிடையே அன்பு ரஜினி கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு சோழன் புதுச்சேரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் சோழனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டார். உடனே லாஸ்பேட்டை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சோழனை கைது செய்து காலாப்பட்டு சிறையில் மீண்டும் அடைத்தனர்.
Related Tags :
Next Story