மாவட்ட செய்திகள்

சிவகாசி அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை கணவன் கைது + "||" + Husband arrested for murdering teenager near Sivakasi

சிவகாசி அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை கணவன் கைது

சிவகாசி அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை கணவன் கைது
சிவகாசியில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி இந்திராநகரை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 24). இவருக்கும் ஜெயலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இருவரும் வேறு, வேறு பட்டாசு ஆலைகளில் கூலி தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு கயல்விழி என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது.


இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று காலையிலும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் இருவரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளனர்.

கழுத்தை அறுத்து கொலை

இதற்கிடையே மதியம் 1.30 மணிக்கு மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சரவணக்குமார், ஜெயலட்சுமியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி துணை போலீஸ்சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் ஆகியோர் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விருதுநகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜ் சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்தினார். மனைவியை கொலை செய்த சரவணக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை கொன்றதாக தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் கைது
திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
2. ராமேசுவரத்தில் தந்தை அடித்து கொலை; வாலிபர் கைது
ராமேசுவரத்தில் தந்தையை அடித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. நடிகை பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்த முக்கிய குற்றவாளி கைது
நடிகை பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த முக்கிய குற்றவாளியை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
4. மாற்றுத்திறனாளி வீட்டில் நகை திருடிய நகராட்சி தூய்மை பணியாளர் கைது
மாற்றுத்திறனாளி வீட்டில் நகை திருடிய நகராட்சி தூய்மை பணியாளரை போலீசார் கைது செய்தனர்.
5. மோட்டார் சைக்கிள் தரமறுத்ததால் ஆத்திரம்: நண்பரின் கடையில் செல்போன், பழங்கள் திருடியவர் கைது
ராமநாதபுரத்தில் மோட்டார் சைக்கிள் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த நண்பரின் கடையை உடைத்து செல்போன்கள் திருடியதோடு அருகில் இருந்த பழக்கடையில் பழங்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.