மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் சளி-காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு + "||" + Corona test mandatory for people with colds in Bangalore: Karnataka govt order

பெங்களூருவில் சளி-காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூருவில் சளி-காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு
பெங்களூருவில் சளி-காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,

இதுகுறித்து சமூக நலத்துறை கமிஷனரும், பெங்களூரு கொரோனா தடுப்பு செயல்படை (பரிசோதனை) தலைவருமான ரவிக்குமார் சுரபுரா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பெங்களூரு நகர் மற்றும் பெங்களூரு புறநகர் பகுதியில் மூச்சுத்திணறல் பிரச்சினை உள்ளவர்கள், சளி-காய்ச்சல் உள்ளவர்கள், நோய் முற்றிய நிலையில் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். இதனால் நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டாலும், மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன. அதனால் பெங்களூருவில் கடந்த 10 நாட்களாக சளி-காய்ச்சலுடன் மூச்சுத்திணறல் பிரச்சினை உள்ளவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இந்த பிரச்சினை இருப்பவர்கள் முதலில் காய்ச்சல் மையங்களுக்கு வர வேண்டும். அங்கு உடல் பரிசோதனை முடிந்த பிறகு, அங்குள்ள டாக்டர் பரிந்துரைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெங்களூருவில் 52 அரசு காய்ச்சல் மையங்கள், 65 தனியார் காய்ச்சல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த மையங்களில் கொரோனா பரிசோதனைக்கு தேவைப்படும் சளி மாதிரியும் சேகரிக்கப்படுகிறது.

அரசு மையங்களில் சளி மாதிரி சேகரிப்புக்கு கட்டணம் கிடையாது. காய்ச்சல் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், காய்ச்சல் மையங்களாக பதிவு செய்துகொள்ள வேண்டும். ஒருவேளை தங்களிடம் சளி மாதிரி சேகரிக்க போதுமான வசதிகள் இல்லாத நிலையில், அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மையங்களுக்கு அனுப்பி சளி சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ரவிக்குமார் சுரபுரா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் 57 வார்டுகளில் காய்ச்சல் சிகிச்சை மையம் இல்லை - கொரோனா பரிசோதனை செய்ய முடியாமல் மக்கள் அவதி
பெங்களூருவில் 57 வார்டுகளில் காய்ச்சல் சிகிச்சை மையம் இல்லாததால், கொரோனா பரிசோதனை செய்ய முடியாமல் மக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
2. பெங்களூருவில் தவறான தகவல் அளித்து தலைமறைவாக இருந்த 3,300 கொரோனா நோயாளிகள் சிக்கினர்
பெங்களூருவில் தவறான தகவல் அளித்து தலைமறைவாக இருந்த 3,300 கொரோனா நோயாளிகள் சிக்கினார்கள். போலீசாருடன் இணைந்து சுகாதாரத்துறையினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
3. பெங்களூருவில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - கொலை செய்ததாக கணவர் மீது புகார்
பெங்களூருவில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை கொலை செய்ததாக கணவர் மீது பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
4. கொரோனா பாதிப்பு: வீடுகளுக்கு சீல் மன்னிப்பு கோரிய மாநகராட்சி கமிஷனர்
கொரோனா பாதிப்பு காரணமாக அத்தியாவசி தேவைகளுக்கு தொடர்பு கொள்ளமுடியாமல் வீடுகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி ஊழியர்களால் கமிஷனர் மன்னிப்பு கோரினார்
5. பெங்களூருவில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது: கிராம எல்லைகளை மூடி, அறிவிப்பு பலகை வைத்த மக்கள்
சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்குள் நுழைய பெங்களூருவில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என்று கிராம எல்லைகளை மூடி, அறிவிப்பு பலகையை மக்கள் வைத்துள்ளனர்.