கொரோனா பரவலை தடுக்க கள்ளக்குறிச்சியில் முழு கடையடைப்பு


கொரோனா பரவலை தடுக்க கள்ளக்குறிச்சியில் முழு கடையடைப்பு
x
தினத்தந்தி 29 Jun 2020 8:27 AM IST (Updated: 29 Jun 2020 8:27 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கள்ளக்குறிச்சியில் நேற்று முழு கடையடைப்பு நடைபெற்றது.

கண்டாச்சிமங்கலம்,

கள்ளக்குறிச்சி நகர பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 70-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனா தொற்று பரவலை தடுக்க கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட 16,17,18,19 ஆகிய 4 வார்டுகளை தனிமைப்படுத்தபட்ட பகுதியாக அறிவித்ததோடு, 18 இடங்களில் தடுப்புகள் அமைத்து அங்கு தீவிர கண்காணிப்பில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளை திறக்கவும் தடைவிதிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நகர அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் கள்ளக்குறிச்சியில் முழு கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்தனர். அதன்படி நேற்று கள்ளக்குறிச்சியில் கடையடைப்பு நடந்தது.

வெறிச்சோடிய சாலைகள்

இதில் கள்ளக்குறிச்சி நகர பகுதியில் உள்ள மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், ஓட்டல்கள், நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இருப்பினும் மருந்தகம், மருத்துவமனைகள் வழக்கம்போல் இயங்கின. அதே போல் ஒரு சில இறைச்சி கடைகளும் திறந்து இருந்தன. இந்த கடையடைப்பு காரணமாக கள்ளக்குறிச்சியில் உள்ள துருகம் சாலை, காந்தி சாலை, சங்கராபுரம் சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

Next Story