கீழக்கரை அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கொரோனா வார்டு


கீழக்கரை அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கொரோனா வார்டு
x
தினத்தந்தி 29 Jun 2020 10:24 AM IST (Updated: 29 Jun 2020 10:24 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கரை அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கொரோனா வார்டு.

கீழக்கரை,

கீழக்கரையில் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதுதவிர கீழக்கரையை சுற்றிலும் கும்பிடு மதுரை, நத்தம், கொம்பூதி, ஏர்வாடி, மாயாகுளம், புல்லந்தை, காஞ்சிரங்குடி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கீழக்கரையில் இதுவரையிலும் 90-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கீழக்கரை அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் பொழுதுபோக்கிற்காக ஒவ்வொரு அறைகளுக்கும் டி.வி. பொருத்தப்பட்டு உள்ளது. இதேபோல ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் உணவு உண்பதற்காக மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கீழக்கரை பைத்துல்மால் உதவியுடன் அதன் தலைவர் சாதிக் அலி, துணை தலைவர் ஹபீபுல்லாகான் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Next Story