மாவட்ட செய்திகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நெல்லையில் டீக்கடைகள் காலை 9 மணி வரை மட்டுமே செயல்படும் - கலெக்டர் ஷில்பா உத்தரவு + "||" + Collector Shilpa directs that the tea shops in Tirunelveli will be open till 9 am to control corona spread

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நெல்லையில் டீக்கடைகள் காலை 9 மணி வரை மட்டுமே செயல்படும் - கலெக்டர் ஷில்பா உத்தரவு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நெல்லையில் டீக்கடைகள் காலை 9 மணி வரை மட்டுமே செயல்படும் - கலெக்டர் ஷில்பா உத்தரவு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நெல்லை மாநகரில் காலை 9 மணி வரை மட்டுமே டீக்கடைகள் செயல்படும் என்று கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் நேற்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது டீ கடைகளில் பொது மக்கள் அவசியமின்றி அதிகளவு கூடுவது கண்டறியப்பட்டது.

பொது மக்களின் இந்த செயலால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிகழ சாத்தியக்கூறுகள் இருக்கிறது. எனவே கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தினமும் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே டீ கடைகள் செயல்பட அனுமதித்து ஆணையிடப்படுகிறது.


நெல்லை டவுன் நயினார்குளத்தில் இயங்கி வந்த மொத்த காய்கறி மார்க்கெட் தற்போது புதிய பஸ்நிலைய வளாகத்துக்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டை பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்கு மாற்றம் செய்து ஆணையிடப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்படும் நடைமுறைகளுக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி; செவிலியர் உள்பட 53 பேருக்கு பாதிப்பு
தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 26 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
2. கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு; கலெக்டரின் தனி உதவியாளர்கள் உள்பட 46 பேர் பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். கலெக்டரின் தனி உதவியாளர்கள் உள்பட 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. கோவையில் மூதாட்டி உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி
கோவையில் கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 2 பேர் பலியானார்கள்.
4. தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி
தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். செவிலியர்கள் உள்பட 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
5. மாவட்டத்தில் 39 பேரின் உயிரை பறித்த கொரோனா; இறுதி கட்டத்தில் சிகிச்சைக்கு வருவதால் பலி எண்ணிக்கை உயர்கிறது
திண்டுக்கல் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதேநேரம் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.