ரூ.200 செலவில் வைரசை கண்டறிய முடியும்: கொரோனா தடுப்பு உபகரணங்களை கண்டுபிடித்த நிறுவனங்கள் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தகவல்


ரூ.200 செலவில் வைரசை கண்டறிய முடியும்: கொரோனா தடுப்பு உபகரணங்களை கண்டுபிடித்த நிறுவனங்கள் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தகவல்
x
தினத்தந்தி 8 July 2020 4:31 AM IST (Updated: 8 July 2020 4:31 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு நிறுவனங்கள் கொரோனா தடுப்பு உபகரணங்களை கண்டுபிடித்துள்ளதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.

பெங்களூரு, 

துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு பயோ இன்னோவேஷன் மையத்தில் பல்வேறு நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இதில் கொரோனா தடுப்பு பணியில் பயன்படுத்தப்படும் 6 உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. நாம் பெரும்பாலான உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.

பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டத்தால் தான் இது சாத்தியமாகியுள்ளது. இந்த 6 உபகரணங்களுக்கு தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இனி இந்த உபகரணங்களை அனைவரும் பயன்படுத்த முடியும். கொள்முதல் செய்ய முடியும். இந்த உற்பத்தி பொருட்களுக்கு கர்நாடக அரசு ஊக்கம் அளிக்கும்.

மிக குறைந்த குறுகிய காலத்திலேயே நமது விஞ்ஞானிகள் உபகரணங்கள் தயாரித்து சாதனை படைத்துள்ளனர். இவை, வெளிநாடுகளில் இருந்து இறக்கும் செய்யப்படும் உபகரணங்களை விட தரமானது மற்றும் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளை கொண்டதாக உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இது முக்கிய பங்காற்றும்.

சீதேலடெக்ஸ், இது அலட்ராவைலேட் ஒளிக்கதிர் உள்ளது. அந்த ஒளிக்கதிர் பொருட்களின் மீது விழும்போது, அங்கு வைரஸ் இருந்தால் 15 வினாடிகளில் செத்துவிடும். இந்த கருவியை பஸ் நிலையங்கள், விமான, ரெயில் நிலையங்களில் வைத்து பயன்படுத்த முடியும். கொரோனா பரிசோதனை கருவியில் பயன்படுத்தப்படும் பிளோரோசென்ஸ் பிரோப்ஸ் கருவி கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த கருவி தற்போது பெங்களூருவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவில் கொரோனா பரிசோதனை கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். இது மிகவும் தரமானதாகும்.

உயிர் கண்காணிப்பு எந்திரம் (பீடெல் மானிடரிங் டிவைஸ்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களின் இதய துடிப்பை இந்த கருவி மூலம் அறிந்துகொள்ள முடியும். இந்த கருவியை கர்ப்பிணி பெண்ணின் வயிறு மீது வைத்துவிட்டால், அனைத்து விவரங்களும் டாக்டருக்கு தெரிந்துவிடும்.

வைரல் டிரான்ஸ்போர்ட் மீடியா கருவி, கொரோனா பாதிப்பை கண்டறிய சளி மாதிரியை பரிசோதனை ஆய்வகத்திற்கு எடுத்து செல்ல பாதுகாப்பானது ஆகும். உயிருடன் இருக்கும் வைரசை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்வது என்பது பெரும் சவாலானது. கோவ் என்ற கருவி, நோயாளியின் நெஞ்சு பகுதியில் வைத்து எக்ஸ்ரே எடுத்தால், வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள முடியும். இதற்கு ரூ.150 முதல் ரூ.200 மட்டுமே செலவாகும். ஆன்டிமைக்ரோபியல் பேஸ்வாஸ் கொண்டு முகத்தை கழுவினால் வைரஸ் அழிந்துவிடும். இது மூலிகை செடிகளில் இருந்து தயாரிக்கப்பட்டவை.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.


Next Story