சேலத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா


சேலத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 July 2020 1:40 AM GMT (Updated: 2020-07-08T07:10:29+05:30)

சேலத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சேலம், 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்த வைரசுக்கு 4 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.

இதனிடையே மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வரும் இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து அங்கு கொரோனா தடுப்பு பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 40 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதாவது, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 41 பேர், கன்னங்குறிச்சி, சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த 4 பேர், சங்ககிரி பகுதியை சேர்ந்த 3 பேர், திருவள்ளூரில் இருந்து சேலம் வந்த 2 பேர், கடலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,340-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 30 பேர் குணமடைந்து விட்டதால், அவர்கள் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.

Next Story