மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் வாலிபரை கத்தியால் வெட்டி நகை பறிப்பு; 3 பேர் கைது + "||" + Youth in Sriperumbudur cut off with a knife; 3 arrested

ஸ்ரீபெரும்புதூரில் வாலிபரை கத்தியால் வெட்டி நகை பறிப்பு; 3 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூரில் வாலிபரை கத்தியால் வெட்டி நகை பறிப்பு; 3 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூரில் வாலிபரை கத்தியால் வெட்டி நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் டி.கே.நாயுடு நகர் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவர், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு விஜய் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். ஸ்ரீபெரும்புதூர் ஜெயின் கோவில் அருகே வந்த போது 2 பேர் விஜயை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி செல்போன் மற்றும் தங்க மோதிரத்தை தரும்படி கேட்டனர். 

அவர் தர மறுக்கவே அவர்கள் தங்களிடம் இருந்த கத்தியால் விஜயின் கை, முகம் போன்ற இடங்களில் வெட்டி விட்டு அவர் அணிந்து இருந்த ½ பவுன் தங்க மோதிரத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை பகுதியை சேர்ந்த ரபீ (24), திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த மும்முடிகுப்பம் பகுதியை சேர்ந்த சந்துரு (19), சுங்குவார் சத்திரத்தை சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த தங்க மோதிரம், கத்தி போன்றவற்றை கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகையை கற்பழித்து கொன்று விடுவதாக மிரட்டல் வாலிபர் கைது
மராத்தி பட நடிகையை கற்பழித்து கொலை செய்து விடுவதாக மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. திருப்போரூர் அருகே, வாலிபர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை
திருப்போரூர் அருகே தனது அண்ணனின் நண்பரை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்திமுனையில் ரூ.6½ லட்சம் கொள்ளை- 11 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்திமுனையில் ரூ.6½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
4. திருவானைக்காவலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: பதற்றம்-போலீசார் குவிப்பு
திருவானைக்காவலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அங்கு பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
5. ஸ்ரீபெரும்புதூர் அருகே காரில் மது பாட்டில்கள் கடத்தல்; 2 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே காரில் மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.