பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்


பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்
x
தினத்தந்தி 16 July 2020 11:48 AM IST (Updated: 16 July 2020 11:48 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர்,

கொரோனா தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் 2020-21-ம் கல்வி யாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மற் றும் பிளஸ்-2 மாணவ-மாணவி களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் திட்டத் தினை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதன் படி பெரம்பலூர் மாவட்டத் தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் 5 ஆயிரத்து 410 மாணவ- மாணவிகளுக்கும், பிளஸ்-2 பயிலும் 4 ஆயிரத்து 813 மாணவ-மாணவிகளுக்கும் நேற்று முதல் விலையில்லா பாடப்புத்தங்கள், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் 10-ம் வகுப்பு பயிலும் 10 ஆயிரத்து 500 மாணவ- மாணவிகளுக்கும், பிளஸ்-2 பயிலும் 8 ஆயிரத்து 600 மாணவ-மாணவிகளுக்கும் விலையில்லா பாடப் புத்தகங் கள் வழங்கும் பணி தொடங்கியது.

இதில் அரியலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்து கிருஷ் ணன் மாணவிகளுக்கு பாடப் புத்த கங்களை வழங்கினார். இதில் பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, தலைமை ஆசிரியை, ஆசிரியர் கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் முன் னிலையில் மாணவ- மாணவி களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட் டது. விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் போது மாணவர்கள், ஆசிரியர்கள் முககவசம் அணிந்திருந்தனர். சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்பட்டது. மாணவ- மாணவிகளுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கப் பட்டது. ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வரவழைக் கப்பட்டு, அவர்களுக்கு பாடப் புத்த கங்கள் வினியோகிக்கப்பட்டது.

மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 பயிலும் மாணவ- மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி யில் கல்வி பயில ஏதுவாக பாடங்களை மடிக்கணினி களில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலமாக ஆசிரியர்கள் தரவிறக்கம் செய்து கொடுத் தனர். விலையில்லா பாடப் புத்தகங்களை பெறாத 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பயிலும் மாணவ-மாணவிகள் அல் லது அவர்களது பெற்றோர்கள் பள்ளி வேலை நாட்களில் பள்ளிகளுக்கு சென்று பெற்று கொள்ளலாம்.

Next Story