திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 139 பேருக்கு கொரோனா தொற்று


திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 139 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 20 July 2020 5:40 AM IST (Updated: 20 July 2020 5:40 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 139 பேருக்கு கொரோனா தொற்று.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று திண்டுக்கல், நிலக்கோட்டை, நத்தம், பழனி, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் 53 பெண்கள், 13 சிறுவர்கள் அடங்குவார்கள். இதன்மூலம் மாவட்டத்தில் 1,602 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் 700-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

Next Story