மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை, போளூரில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் + "||" + Thiruvannamalai, In Polur Sugarcane farmers protest

திருவண்ணாமலை, போளூரில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, போளூரில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை, போளூரில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட 12 மண்டல அலுவலகங்கள் முன்பு நேற்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவண்ணாமலை வேங்கிக்கால் புதூர் பகுதியில் உள்ள மண்டல அலுவலகம் முன்பு சதீஷ்குமார் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


இதில் திருவண்ணாமலை மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்டு ஒன்றிய செயலாளர் ராமதாஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க துரிஞ்சாபுரம் ஒன்றிய செயலாளர் பன்னீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரத்து 500 வழங்க வேண் டும். சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய பாக்கி ரூ.405 கோடியை மாநில அரசு பெற்றுத் தர வேண்டும். மாநில அரசு ஊக்கத் தொகை ஒரு டன் கரும்புக்கு ரூ.400 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் போளூரை அடுத்த கடைப்பூண்டியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் போளூர் பகுதி கரும்பு விவசாயிகளுக்கு ரூ.23 கோடி பாக்கி வழங்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பாக்கி தொகையை வழங்கக்கோரி கரும்பு விவ சாயிகள் பெரியகரம், அத்தி மூர், பொத்தரை, செமியமங்க லம், ராந்தம், விளாப்பாக்கம் ஆகிய 6 கிராமங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிர்வாகிகள் பாலமுருகன், சண்முகம், பாண்டுரங்கன் உள்ளிட்டவர்கள் தலைமை தாங்கினர்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக களம்பூர் அருகே தெற்குமேடு கிராமத்திலும், வடமாதி மங்கலம் ஈஸ்வரன் கோவில் முன்பாகவும், முக்குறும்பை ஊராட்சி மன்றம் எதிரிலும் கரும்பு விவசாயிகள் கரும்பு டன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் முக்குறும்பை விவசாய சங்கத்தலைவர் சங்கர், கிளை தலைவர்கள் சிதம்பரம், உத்தமன் ஆகியோர் தலைமையில் தனித்தனியே 3 இடங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.


வந்தவாசி, மங்கலம், மாமண்டூர் கூட்டுரோடு, ஒசூர், நல்லூர், காரணை, கீழ்க்குவளைவேடு, தென்எலப்பாக்கம், இரும்பேடு ஆகிய இடங்களில் நேற்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் சங்க மாநில குழு உறுப்பினர் பெ.அரிதாசு மற்றும் ந.ராதாகிருஷ்ணன், யாசர்அராபத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தச்சம்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் டன் ஒன்றுக்கு 4,500 ரூபாய் வழங்க கோரியும், ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவண்ணாமலையில் எடப்பாடி பழனிசாமி காரில் கிரிவலம் சென்றார்
திருவண்ணாமலையில் எடப்பாடி பழனிசாமி காரில் கிரிவலம் சென்றார்.
2. திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.19.20 கோடியில் 11 புதிய திட்ட பணிகள் - முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.19.20 கோடியில் 11 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
3. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் சாலை மறியல்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக மேற்கொள்ளப்பட்டு உள்ள பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு - எரியாத தெருவிளக்குகளை சரி செய்ய உத்தரவு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் தரிசனத்துக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
5. திருவண்ணாமலையில் பரபரப்பு: மோட்டார் சைக்கிள் ஷோரூமில் ரூ.3½ லட்சம் திருட்டு - போலீசார் விசாரணை
திருவண்ணாமலை தனியார் மோட்டார் சைக்ககிள் ஷோரூமில் ரூ.3½ லட்சம் திருடப்பட்டுள்ளது. இது குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை