மாவட்ட செய்திகள்

உணவில் விஷம் கலந்து கொடுத்தும் சாகாததால் துப்பட்டாவால் கணவரின் கழுத்தை நெரித்து கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது + "||" + Wife arrested for strangling husband to death with food poisoning

உணவில் விஷம் கலந்து கொடுத்தும் சாகாததால் துப்பட்டாவால் கணவரின் கழுத்தை நெரித்து கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது

உணவில் விஷம் கலந்து கொடுத்தும் சாகாததால் துப்பட்டாவால் கணவரின் கழுத்தை நெரித்து கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது
உணவில் விஷம் கலந்து கொடுத்தும் சாகாததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து துப்பட்டாவால் கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் தரணிதரன்(வயது 39). கார் டிரைவர். இவருடைய மனைவி பவானி(31). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். தரணிதரன், கடந்த 22-ந் தேதி கடன் தொல்லையால் துப்பட்டாவால் தனது கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பவானி, பூந்தமல்லி போலீசில் புகார் செய்தார்.


அதன்பேரில் பூந்தமல்லி போலீசார் தரணிதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசார் கருதினர். இதற்கிடையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தரணிதரன், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அவரது மனைவி பவானியிடம் போலீசார் விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். அவரது செல்போன் அழைப்புகளை சோதனை செய்தபோது, அதில் ஒரு நபர் மட்டும் அடிக்கடி பேசி இருப்பதும், தரணிதரன் இறப்பதற்கு முன்பு அந்த நபர் அவரது வீட்டுக்கு வந்து சென்றதும் தெரியவந்தது.

கள்ளக்காதலனுடன் கைது

அதன்பிறகு பவானியிடம் தீவிரமாக விசாரித்தபோது, கணவனை கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்த திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். இதையடுத்து பவானி மற்றும் அவரது கள்ளக்காதலனான பூந்தமல்லி திருமால் நகரைச் சேர்ந்த தினேஷ்(31) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

கொலையான தரணிதரனின் நண்பரான தினேசும் டிரைவராக உள்ளார். இருவரும் ஒன்றாக மது அருந்துவார் கள். இதனால் தரணிதரன் வீட்டுக்கு தினேஷ் அடிக்கடி வந்து செல்வார். அப்போது தினேசுக்கும், பவானிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. தினேஷ் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். தங்களது கள்ளக்காதலுக்கு தரணிதரன் இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

உணவில் விஷம்

கடந்த 21-ந் தேதி பூச்சி மருந்து கடையில் இருந்து பூச்சி மருந்தை வாங்கி வந்த தினேஷ், அதை பவானி வீட்டுக்கு சென்று கொடுத்தார். தரணிதரனுக்கு அதை உணவில் கலந்து கொடுத்து விடும்படி பவானியிடம் கூறிவிட்டு சென்றார். அதன்படி அன்று இரவு போதையில் வீட்டுக்கு வந்த தரணிதரனுக்கு பவானி, உணவில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்தார்.

அதனை சாப்பிட்டு விட்டு தூங்கிய தரணிதரன், மறுநாள் 22-ந் தேதி காலையில் வழக்கம்போல் எழுந்து வாந்தி மட்டும் எடுத்து விட்டு காபி குடித்துவிட்டு தன்னை 10 மணிக்கு எழுப்பி விடுமாறு கூறிவிட்டு மீண்டும் தூங்கிவிட்டார். உணவில் விஷம் கலந்துகொடுத்தும் கணவர் சாகாததால் ஆத்திரமடைந்த பவானி, கள்ளக்காதலன் தினேசுக்கு தகவல் தெரிவித்தார்.

கழுத்தை நெரித்து கொலை

அதன்படி தினேஷ் வீட்டுக்கு வருவதற்குள் தனது 2 மகள்களையும் மாடியில் உள்ள அவரது தாத்தா வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். தினேஷ் வீட்டுக்கு வந்ததும் படுத்துகிடந்த தரணிதரனின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொலை செய்தார். இதில் மனைவி கண் எதிரேயே தரணிதரன் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரே தற்கொலை செய்து கொண்டதுபோல் துப்பட்டாவின் இரண்டு பகுதிகளையும் தரணிதரன் கையில் சுற்றி விட்டு தினேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர் கொலையை மறைப்பதற்காக கடன் தொல்லையால் தனது கணவர் தனக்கு தானே துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்துகொண்டது போல் பவானி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. பவானிக்கு அதே பகுதியில் வேறு ஒரு நபருடனும் கள்ளதொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தரணிதரனை கொலை செய்தது எப்படி? என கைதான இருவரும் போலீசார் முன்னிலையில் நடித்து காட்டினார்கள். அதனை போலீசார் வீடியோ பதிவு செய்தனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை, மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தந்தையை இழந்தும், தாய் கைதானதாலும் அவர்களது 2 மகள்களும் ஆதரவின்றி தவிப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் வேதனை அடைந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் போலி பணிநியமன ஆணை வழங்கிய வழக்கில் தனியார் பள்ளி பங்குதாரர் கைது
ஈரோட்டில் போலி பணிநியமன ஆணை வழங்கிய வழக்கில் தனியார் பள்ளிக்கூட பங்குதாரரை போலீசார் கைது செய்தனர்.
2. தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை
தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முக்கிய தடயங்களை ஆய்வு செய்தனர்.
3. தூத்துக்குடி அருகே, திருட்டு வழக்கில் கைது: தப்பி ஓடிய கைதி பிடிபட்டார் 2 நாளில் பல்வேறு இடங்களில் கைவரிசை
தூத்துக்குடி அருகே கோர்ட்டுக்கு அழைத்து சென்றபோது தப்பி ஓடிய கைதி நேற்று மாலை பிடிபட்டார். அவர் 2 நாளில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்து உள்ளது.
4. தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை இன்று தொடங்குகிறது
தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று (புதன்கிழமை) விசாரணையை தொடங்குகிறார்கள்.
5. போலீஸ் போல் நடித்து 50 பெண்களை பலாத்காரம் செய்த லாரி அதிபர் கைது
செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளக்காதல் ஜோடிகளை குறிவைத்து போலீஸ் போல் நடித்து மிரட்டி 50-க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த டேங்கர் லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.