உடன்குடி பகுதியில் சித்தா மருந்தாளுனர் உள்பட 10 பேருக்கு கொரோனா


உடன்குடி பகுதியில் சித்தா மருந்தாளுனர் உள்பட 10 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 Aug 2020 1:20 AM IST (Updated: 7 Aug 2020 1:20 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி பகுதியில் சித்தா மருந்தாளுனர் உள்பட 10 பேருக்கு கொரோனா.

உடன்குடி,

உடன்குடி வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்தது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று உடன்குடி சித்தா மருந்தாளுனர், உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சி எழுத்தர், உடன்குடி அனல் மின்நிலைய குடியிருப்பில் வசித்து வரும் 23,24,29 வயதுள்ள ஆண் ஊழியர்கள், பரமன்குறிச்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 52,23 வயதுள்ள ஆண்கள், ஜெ.ஜெ.நகரில் 26 வயது பெண், மெஞ்ஞானபுரத்தில் 44 வயது ஆண் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து தொற்று பாதித்தவர்கள் வசித்து வரும் பகுதியில் வட்டார சகாதார துறையினர், செவிலியர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி மாதிரி சேகரித்தனர். அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Next Story