திருப்பூரில் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது


திருப்பூரில் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2020 10:06 AM IST (Updated: 7 Aug 2020 1:30 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் தொடர் வழிப்பறி, வீடு மற்றும் கடைகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

நல்லூர், 

திருப்பூரில் பல்வேறு பகுதியில் திருட்டு, கொள்ளை, நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ந் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் திருப்பூர் ஆர்.வி.ஈ. நகர் முதல் வீதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த 70 வயது முதியவரை அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையை காட்டி மிரட்டி ஒரு கும்பல் கொள்ளையடிக்க முயன்றது. அப்போது அவர் கூச்சல் போடவே வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள் வந்ததால் கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைகண்டுபிடிக்க உதவி கமிஷனர் நவீன்குமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி தனிப்படையினர் ஊரக போலீஸ் நிலையம் மற்றும் வீரபாண்டி போலீஸ் நிலையங்களில் திருட்டு நடைபெற்ற பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேற்கண்ட சம்பவங்களில் பேராவூரணியை சேர்ந்த விக்னேஷ் (வயது 21), திருப்பூர் வினோபா நகரை சேர்ந்த சிவக்குமார் (26), குடிமரத்தூரை சேர்ந்த சித்திக்அலி (46), அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் பகுதியை சேர்ந்த கொழிஞ்சியப்பன் (23), சக்திவேல் (21), லோக நாதன் (21), கம்பம் பகுதியை சேர்ந்த நாகூர்மீரான் (30) ஆகிய 7 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 7 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து எல்.இ.டி.டிவி 2, கணினி 1, ஹோம் தியேட்டர் 1, கேமரா 2, வெள்ளி கொலுசு 1, வெள்ளி கிண்ணம் 1, வெள்ளி மோதிரம் 1, கைக் கெடிகாரம் 5, வெள்ளி அருணாக்கொடி 1, செல்போன் 6, உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொ ருட்கள் பறிமுதல் செயப் பட்டது. இதில் தொடர் புடைய 2 பேர் மீது ஏற்கனவே வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

இவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். குற்றவாளிகளை பிடிக்க பணியாற்றிய தனிப்படை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டி னார்.


Next Story