நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உயிரிழப்பில் 42 சதவீதம் பேர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் - தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உயிரிழப்பில் 42 சதவீதம் பேர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் என்று தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார்.
மும்பை,
மராட்டிய எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கோவா சென்றிருந்தார். அங்கு அந்த மாநில பா.ஜனதா முதல்-மந்திரியான பிரமோத் சாவந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
பின்னர் தேவேந்திர பட்னாவிசிடம் மராட்டிய கொரோனா நிலவரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நிலைமை மிக மோசமாக உள்ளது. நாடு முழுவதும் ஏற்படும் மொத்த உயிரிழப்பில் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 42 சதவீதம் பேர் ஆவர். கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பதை மராட்டிய அரசு தடுக்க தவறி விட்டது. மேலும் பரிசோதனைகளை அதிகரித்து, தனிமை மையங்களை அதிகரிக்க வேண்டும்.
ஆன்டிஜென் பரிசோதனை முறையை கைவிட்டு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story