சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம்,
சி.ஐ.டி.யு., அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவை சார்பில் சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக 6 மாதங்களுக்கு ரூ.7,500 வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். கொரோனா தடைக்கால நிவாரணமாக ஒவ்வொரு நபருக்கும் 10 கிலோ அரிசி வீதம் 6 மாதத்துக்கு இலவசமாக வழங்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பாலசுந்தர கணபதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் பாலகிருஷ்ணன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயபால் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நவநீதகிருஷ்ணன், ஆத்தி, சிவபெருமாள், ஜேசுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். சி.ஐ.டி.யு. திருச்செந்தூர் கோட்ட பொறுப்பாளர் நெல்சன் நன்றி கூறினார்.
இதேபோல், ஸ்ரீவைகுண்டத்தில் இந்திய தொழில் மையம், தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் நம்பிராஜன் தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரசல், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெயில்வே, மின்சாரம், வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. வேலை உறுதி திட்டத்தில் 200 நாட்களுக்கு வேலை வழங்கி தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தொழிற்சங்க நிர்வாகிகள் கணபதி, முருகேசன், வீரன், சண்முகசுந்தரம், போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் சிவசுப்பு, ஆறுமுகம், உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story