கொரோனா வைரஸ் பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது புதிதாக 328 பேருக்கு தொற்று; 4 பேர் உயிரிழப்பு


கொரோனா வைரஸ் பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது புதிதாக 328 பேருக்கு தொற்று; 4 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 15 Aug 2020 4:44 AM IST (Updated: 15 Aug 2020 4:44 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியது. புதிதாக நேற்று 328 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரி, 

புதுவையில் நேற்று முன்தினம் 1,102 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 328 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 181 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அரியூரை சேர்ந்த 69 வயது முதியவர், கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் ஜிப்மரிலும், புதுவை மணக்குள விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த 67 வயது முதியவரும், எல்லைப்பிள்ளைச்சாவடியை சேர்ந்த 52 வயது பெண்ணும் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் இறந்துள்ளனர்.

7 ஆயிரம்

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 52 ஆயிரத்து 22 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 6 ஆயிரத்து 995 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது தொற்று பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இன்னும் 438 பேரின் சோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 1,832 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,048 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 9 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 106 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்பு என்பது 1.52 சதவீதமாகவும், குணமடைவது 57.31 சதவீதமாகவும் உள்ளது.

Next Story