கந்தர்வகோட்டை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுமுகத்திற்கு கொரோனா மகனுக்கும் பாதிப்பு
கந்தர்வகோட்டை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுமுகத்திற்கும், அவரது மகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அன்னவாசல்,
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் ஏழை-பணக்காரன், ஆட்சி அதிகாரம் என்ற பாகுபாட்டை எல்லாம் தாண்டி அரசியல் வாதிகளையும் தாக்கி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதுவரை மாவட்டம் முழுவதும் 4,555 பேருக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கந்தர்வகோட்டை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நார்த்தாமலை ஆறுமுகத்தின் (வயது 58) இளைய மகன் குரளரசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை கோவிட்-19 சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.
ஆறுமுகம் எம்.எல்.ஏ.வுக்கு தொற்று
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஆறுமுகத்திற்கும் காய்ச்சல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. ஆறுமுகத்திற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். மேலும் ஆறுமுகத்தின் மூத்த மகன் முத்தமிழ்செல்வனுக்கும் கொரோனா தொற்று உறுதியானதால், அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அங்கிருந்து திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் எம்.எல்.ஏ அனுமதிக்கப்பட்டார்.
இதேபோல் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவர், மருத்துவ பணியாளர்கள் 2 பேர் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அன்னவாசல் அரசு மருத்துவமனை முழுவதும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Related Tags :
Next Story