கரூர் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று


கரூர் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 21 Aug 2020 5:27 AM IST (Updated: 21 Aug 2020 5:27 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பசுபதிபாளையத்தை சேர்ந்த 29 வயது பெண், வையாபுரிநகரை சேர்ந்த 54 வயது பெண், காமாட்சியம்மன் கோவிலை சேர்ந்த 45 வயது பெண், குளித்தலையை சேர்ந்த 21 வயது பெண், செல்லாண்டிபாளையத்தை சேர்ந்த 55 வயது பெண், தாந்தோணிமலையை சேர்ந்த 42 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

23 பேர் பாதிப்பு

மேலும் ராயனூரை சேர்ந்த 50 வயது ஆண், சின்னதாராபுரத்தை சேர்ந்த 52 வயது பெண், 25 வயது பெண் உள்பட மொத்தம் 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story