மாணவர் உள்பட 29 பேருக்கு புதிதாக தொற்று: கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி


மாணவர் உள்பட 29 பேருக்கு புதிதாக தொற்று: கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
x
தினத்தந்தி 22 Aug 2020 4:55 AM IST (Updated: 22 Aug 2020 4:55 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் இறந்துள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மாணவர் உள்பட 29 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று கரூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி காந்திகிராமத்தை சேர்ந்த 24 வயதுடைய வாலிபர், 55 வயதுடைய ஆண், 62 வயதுடைய மூதாட்டி, பசுபதிபாளையத்தை சேர்ந்த 14 வயதுடைய பள்ளி மாணவன், 35 மற்றும் 37 வயதுடைய இரண்டு வாலிபர்கள், ஆண்டாங்கோவிலை சேர்ந்த 55 வயதுடைய பெண், 67 வயதுடைய மூதாட்டி ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

29 பேருக்கு தொற்று

அதேபோல் வெங்கமேட்டை சேர்ந்த 28 வயதுடைய வாலிபர்ர், 65 வயதுடைய மூதாட்டி, வாங்கப்பாளையத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண், 52 வயதுடைய ஆண், செல்லாண்டிபாளையத்தை சேர்ந்த 20 வயதுடைய வாலிபர், தாந்தோணிமலையை சேர்ந்த 80 வயதுடைய மூதாட்டி, பசுபதிபுரத்தை சேர்ந்த 43 வயதுடைய ஆண், செல்லாண்டிபாளையத்தை சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டி, மேட்டுதெருவை சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டி, குளித்தலையை சேர்ந்த 55 வயதுடைய பெண், சின்ன ஆண்டாங்கோவிலை சேர்ந்த 60 வயதுடைய முதியவர், மாவடியான்கோயில் தெருவை சேர்ந்த 67 வயதுடைய முதியவர் மணவாடியை சேர்ந்த 83 வயதுடைய மூதாட்டி, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த 26 வயதுடைய இளம்பெண் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரேநாளில் மாவட்டத்தில் மாணவர் உள்பட 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 பேர் பலி

இந்தநிலையில் கொரோனாவுக்கு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 14 பேர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டனர். அதேநேரத்தில் கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 40 வயது ஆண் மற்றும் 50 வயது ஆண் ஆகியோர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் சாவு எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

Next Story