கொரோனா தொற்றில் இருந்து 5 லட்சம் பேர் குணமடைந்தனர் புதிதாக 11 ஆயிரம் பேருக்கு பாதிப்பு


கொரோனா தொற்றில் இருந்து 5 லட்சம் பேர் குணமடைந்தனர் புதிதாக 11 ஆயிரம் பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 25 Aug 2020 5:27 AM IST (Updated: 25 Aug 2020 5:27 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 5 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். இந்தநிலையில் புதிதாக 11 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மும்பை, 

மராட்டிய மாநிலத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று அங்கு 11 ஆயிரத்து 15 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 93 ஆயிரத்து 398 ஆகி உள்ளது.

இதில் 5 லட்சத்து 2 ஆயிரத்து 490 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 14 ஆயிரத்து 219 பேர் குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். மாநிலத்தில் குணமானவர்கள் சதவீதம் 72.47 ஆக உள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 68 ஆயிரத்து 126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

36½ லட்சம் பேருக்கு சோதனை

இதேபோல நேற்று மேலும் 212 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆயிரத்து 465 ஆகி உள்ளனர். நோய் பாதித்தவர்களில் 3.24 சதவீதம் பேர் உயிரிழந்து உள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை 36 லட்சத்து 63 ஆயிரத்து 488 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 18.92 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புனே, தானே நிலவரம்

புனே மாவட்டத்தில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரத்து 511 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 ஆயிரத்து 765 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல 1 லட்சத்து 5 ஆயிரத்து 681 பேர் குணமடைந்தனர். 43 ஆயிரத்து 65 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று புனே புறநகரில் 382 பேருக்கும், புனே மாநகராட்சி பகுதியில் 1,107 பேருக்கும், பிம்பிரி சிஞ்வட்டில் 815 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல தானே மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 499 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 ஆயிரத்து 593 பேர் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்து 570 பேர் குணமடைந்து உளளனர். தற்போது 19 ஆயிரத்து 335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று தானே புறநகரில் 115 பேருக்கும், தானே மாநகராட்சி பகுதியில் 132 பேருக்கும், நவிமும்பையில் 329 பேருக்கும், கல்யாண் டோம்பிவிலியில் 192 பேருக்கும், உல்லாஸ்நகரில் 15 பேருக்கும், பிவண்டியில் 16 பேருக்கும், மிரா பயந்தரில் 74 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story