வேலூர் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


வேலூர் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2020 8:29 AM IST (Updated: 25 Aug 2020 8:29 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்.

வேலூர், 

வேலூர் பார் அசோசியேஷன் சார்பில் வேலூர் கோர்ட்டு முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் பார் அசோசியேஷன் தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். வேலூர் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் தினகரன், தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு துணைத்தலைவர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், உச்சநீதிமன்ற வக்கீல் பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் கைவிட வேண்டும். குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம், சாட்சி சட்டம் உள்ளிட்டவற்றை திருத்தம் செய்ய கூடாது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவை கலைக்க வேண்டும். கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருக்கும் அனைத்து கோர்ட்டுகளையும் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வக்கீல்களுக்கு அரசு கொரோனா நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில், வேலூர் கோர்ட்டு அரசு வக்கீல் புகழேந்தி, தமிழ்நாடு பார்கவுன்சில் முன்னாள் உறுப்பினர் சிவராஜ், வக்கீல்கள் விஜயகுமார், ராஜகுரு மற்றும் பார் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேஷன் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story