மாவட்ட செய்திகள்

மதுரையில் 4 பேர் உயிரை பறித்த கொரோனா புதிதாக 115 பேருக்கு தொற்று + "||" + Corona kills 4 in Madurai 115 new infections

மதுரையில் 4 பேர் உயிரை பறித்த கொரோனா புதிதாக 115 பேருக்கு தொற்று

மதுரையில் 4 பேர் உயிரை பறித்த கொரோனா புதிதாக 115 பேருக்கு தொற்று
மதுரையில் மேலும் 4 பேரின் உயிரை கொரோனா பறித்தது. புதிதாக 115 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
மதுரை,

மதுரையில் நேற்று புதிதாக 115 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 96 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 894 ஆக உயர்ந்துள்ளது.


இந்த நிலையில் மதுரையில் நேற்று ஒரே நாளில் 114 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 90 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். 85 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குணம் அடைந்தனர். இவர்களுடன் மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 684 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 856 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

4 பேர் உயிரிழப்பு

இதனிடையே மதுரையில் நேற்று ஒரே நாளில் 65, 76, 72 வயது முதியவர்கள், 75 வயது மூதாட்டி என 4 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 2 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் இதுவரை கொரோனாவுக்கு 354 பேர் பலியாகி உள்ளனர். மதுரையில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு 100-க்கும் குறைவாக இருந்தது. இந்தநிலையில் 3 தினங்களான 100-க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கோவை மாவட்டத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 648 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 648 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
2. கோவையில் கொரோனா பரிசோதனை வாகனங்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்
கோவையில் 20 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
3. விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன் எம்.எல்.ஏ. குணமடைந்தார்
ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.பி.சண்முகநாதனுக்கு கடந்த 12-ந் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
5. திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா இதுவரை 4,535 பேர் குணமடைந்தனர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 4,535 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.