அரசு மருத்துவமனை ஊழியர்கள் உள்பட 34 பேருக்கு கொரோனா தொற்று


அரசு மருத்துவமனை ஊழியர்கள் உள்பட 34 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 31 Aug 2020 4:46 AM IST (Updated: 31 Aug 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவமனை ஊழியர்கள் உள்பட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதில் வ.உ.சி. தெருவை சேர்ந்த 55 வயது மற்றும் 58 வயதுடைய 2 ஆண்கள், பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 67 வயது மூதாட்டி மற்றும் 69 வயது முதியவர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களான 35 மற்றும் 41 வயதுடைய 2 ஆண்கள், 43 வயதுடைய பெண் என மூன்று பேரும், தண்ணீர்ப்பந்தல் பாளையத்தை சேர்ந்த 55 வயதுடைய ஆண், தோட்டக்குறிச்சியை சேர்ந்த 48 வயதுடைய ஆண், மாயனூரை சேர்ந்த 50 வயதுடைய ஆண், மகாதானபுரத்தை சேர்ந்த 44 வயதுடைய ஆண், ராயனூர் முகாமை சேர்ந்த 50 வயதுடைய பெண், ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்த 27 வயது பெண் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

34 பேருக்கு தொற்று

மேலும் பொன்னாகவுண்டனூரை சேர்ந்த 60 வயது ஆண், வரிக்காபட்டியை சேர்ந்த 40 வயது ஆண், வெள்ளாளப்பட்டியை சேர்ந்த 47 வயது பெண், புலியூரை சேர்ந்த 37 வயது ஆண், மண்மங்கலத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண், அண்ணாநகரை சேர்ந்த 70 வயது முதியவர், பரமத்தியை சேர்ந்த 36 வயது ஆண், பெட்டவாய்த்தலையை சேர்ந்த 49 வயதுடைய ஆண், கோயம்பள்ளியை சேர்ந்த 45 வயதுடைய ஆண், ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த 55 வயதுடைய பெண், கடவூரை சேர்ந்த 20 வயது பெண், காந்தி கிராமத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவர், பிரதட்சணம் சாலையை சேர்ந்த 67 வயதுடைய மூதாட்டி உள்பட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story