திருப்பூரில் வங்கி பெண் அதிகாரிக்கு கொரோனா


திருப்பூரில் வங்கி பெண் அதிகாரிக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 Sept 2020 6:33 PM IST (Updated: 4 Sept 2020 6:33 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வங்கி பெண் அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் கோர்ட்டு ரோட்டில் பொதுத்துறை வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் ஒரு பகுதியாக அதே வங்கியின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் கிளையும் செயல்பட்டு வருகிறது. இந்த கிளை வங்கியில் துணை மேலாளராக குமார்நகரை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். அந்த பெண்ணுக்கு சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவருக்கு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அந்த பெண் அதிகாரி பணியாற்றி வந்த வங்கியின் கடன் வழங்கும் பிரிவு நேற்று மூடப்பட்டது. மேலும், அந்த பெண் பணியாற்றிய வங்கி மற்றும் அதன் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிற மற்றொரு வங்கி என மொத்தம் அங்கு பணியாற்றி வருகிற 20 ஊழியர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் விரைவில் தெரியவரும்.

Next Story