செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று 29 ஆயிரத்தை நெருங்குகிறது


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று 29 ஆயிரத்தை நெருங்குகிறது
x
தினத்தந்தி 8 Sept 2020 3:42 AM IST (Updated: 8 Sept 2020 3:42 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 330 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, தொற்று 29 ஆயிரத்தை நெருங்குகிறது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கண்டிகை, ஆலப்பாக்கம், ஊனைமாஞ்சேரி ஆகிய பகுதியில் 6 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ரேவதிபுரம் பகுதியை சேர்ந்த 55 வயது ஆண், 54 வயது பெண், ஓட்டேரி டி.எஸ்.நகரை சேர்ந்த 51 வயது பெண், நந்திவரம் மேட்டு தெருவை சேர்ந்த 27 வயது ஆண் உள்பட 24 பேர், மறைமலைநகர் நகராட்சியில் உள்ள பேரமனூர் எம்.ஜி.ஆர்.தெருவை சேர்ந்த 23 வயது ஆண், திருமூலர் தெருவை சேர்ந்த 23 வயது இளம்பெண், செந்தில் தெருவை சேர்ந்த 20 வயது இளம்பெண், சங்கராதாஸ் தெருவை சேர்ந்த 5 வயது சிறுவன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 641 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 25 ஆயிரத்து 524 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 460 ஆக உயர்ந்தது.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 23, 33, 35, வயது ஆண்கள், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 37 வயது ஆண் ஆகியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மாவட்டத்தில் நேற்று 190 பேர் கொரோனாவால் பாதிக் கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 501 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 862 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 559 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 24 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 6 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 442 ஆக உயர்ந்தது.

Next Story