மாவட்ட செய்திகள்

நடிகை கங்கனா ரணாவத் பங்களாவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது மும்பை மாநகராட்சி நடவடிக்கையால் பரபரப்பு + "||" + Actress Kangana Ranaut's bungalow notice posted by Mumbai corporation

நடிகை கங்கனா ரணாவத் பங்களாவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது மும்பை மாநகராட்சி நடவடிக்கையால் பரபரப்பு

நடிகை கங்கனா ரணாவத் பங்களாவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது மும்பை மாநகராட்சி நடவடிக்கையால் பரபரப்பு
நடிகை கங்கனா ரணாவத் பங்களாவில் சட்டவிரோத கட்டுமானம் கட்டப்பட்டு இருப்பதாக கூறி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,

நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இதற்கு மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்- கங்கனா ரணாவத் இடையே வார்த்தை போர் நடந்தது.


இதையடுத்து சொந்த ஊரான இமாசல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு கமாண்டோ பாதுகாப்பு வழங்கியது.

மராட்டியத்தில் ஆளும் கட்சியினருடன் மோதல் காரணமாக மும்பை பாந்திராவில் உள்ள தனது அலுவலகத்தை மும்பை மாநகராட்சி இடிக்கலாம் என கங்கனா ரணாவத் நேற்று முன்தினம் அச்சம் தெரிவித்து இருந்தார்.

நோட்டீஸ் ஒட்டப்பட்டது

இந்தநிலையில் பாந்திரா, பாலிஹில்லில் உள்ள நடிகை கங்கனா ரணாவத்தின் பங்களா வீட்டில் பல்வேறு சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி அவருக்கு நேற்று காலை நோட்டீஸ் வழங்கியது. நடிகையின் வீட்டில் யாரும் இல்லாததால் அவரது வீட்டு வாசலில் அதிகாரிகள் நோட்டீசை ஒட்டிச்சென்றனர்.

கங்கணா ரணாவத்தின் பங்களாவில் உரிய அனுமதி இல்லாமல் கழிவறை பகுதியை அலுவலகமாக மாற்றியதாகவும், படிக்கட்டு பகுதியில் புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் மாநகராட்சியின் நோட்டீசுக்கு நடிகை கங்கனா ரணாவத் 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.

இதனால் கங்கனா ரணாவத் பங்களா வீட்டில் சட்டவிரோத கட்டுமானங்கள் இடிக்கப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவொற்றியூரில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி சுவரில் மெட்ரோ ரெயில் ஓவியம் மாணவர்களை கவர ஆசிரியர்கள் நடவடிக்கை
திருவொற்றியூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி சுவரில் மெட்ரோ ரெயில் ஓவியம் வரையப்பட்டு உள்ளது. மாணவர்களை கவர ஆசிரியர்கள் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளனர்.
2. திண்டுக்கல் லியோனி சுவரொட்டியை கிழித்த தி.மு.க.வினரால் பரபரப்பு
திண்டுக்கலில் தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் லியோனி சுவரொட்டியை அக்கட்சியினரே கிழித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
3. கந்துவட்டி கொடுமையால் மனைவி, மகனுடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கந்துவட்டி கொடுமையால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, மகனுடன் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
4. வீட்டை மீட்டு தரக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
வீட்டை மீட்டு தரக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
5. தேங்காய் பற்றாக்குறையை கூற தென்னை மரத்தில் ஏறிய இலங்கை மந்திரியால் பரபரப்பு
இலங்கையில் தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என மக்களிடம் கூற மந்திரி ஒருவர் தென்னை மரத்தில் ஏறியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.