கொரோனாவில் இருந்து குணமடைந்த அரதாளு ஹாலப்பா எம்.எல்.ஏ. மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
கொரோனாவில் இருந்து மீண்ட அரதாளு ஹாலப்பா எம்.எல்.ஏ. மீண்டும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவமொக்கா,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள், கர்ப்பிணிகள் என அனைவரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகளும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் சிவமொக்கா மாவட்டம் சாகர் தொகுதி எம்.எல்.ஏ. அரதாளு ஹாலப்பா கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை பெற்று அரதாளு ஹாலப்பா எம்.எல்.ஏ. கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்.
கொரோனா பாதிப்பு...
பின்னர் வீட்டு தனிமையில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அரதாளு ஹாலப்பாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் அவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதற்கான சரியான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. அவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Tags :
Next Story