வேளாண் மந்திரி விஸ்வஜித் கதமிற்கு கொரோனா
வேளாண்துறை மந்திரி விஸ்வஜித் கதமிற்கு கொரோனா தொற்று உறுதியானதாக அவர் டுவிட்டரில் தகவல் தெரிவித்து உள்ளார்.
புனே,
மராட்டிய மாநில வேளாண்துறை மந்திரியாக இருந்து வருபவர் விஸ்வஜித் கதம். பாலஸ் காடேகாவ் தொகுதி எம்.எல்.ஏ. வான இவர் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரான பதங்ராவ் கதமின் மகன் ஆவார். புனேயை சேர்ந்த இவருக்கு அண்மையில் கடும் காய்ச்சல், உடல் வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனை தொடர்ந்து மந்திரி விஸ்வஜித் கதம் தனிமைபடுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை அவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
வேண்டுகோள்
இதில் அவர் “எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கிறது. தற்போது உடல்நலம் சீராக உள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் 2 அல்லது 3 நாட்களில் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நான் விரைவில் நோய்தொற்றில் இருந்து குணமடைந்து பணியில் ஈடுபடுவேன்” என தெரிவித்து இருந்தார்.
கடந்த வாரம் சட்டமன்ற சபாநாயகர் நானா பட்டோலேவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தவிர ஏற்கனவே மாநில மந்திரிகளான அசோக் சவான், ஜித்தேந்திர அவாத், தனஞ்செய் முண்டே, அஸ்லம் சேக் ஆகியோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story