தேசிய நெடுஞ்சாலையை மாற்று வழியில் அமைக்க வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் கோரிக்கை


தேசிய நெடுஞ்சாலையை மாற்று வழியில் அமைக்க வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் கோரிக்கை
x

தேசிய நெடுஞ்சாலையை மாற்று வழியில் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம், கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்,

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தணயுடையவர் கோவில்பத்து ஊராட்சி மன்ற தலைவர் கரிகாலன் தலைமையில் அப்பகுதி மக்கள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தணயுடையவர் கோவில்பத்து ஊராட்சியில் தலைச்சங்காடு கிராமம் உள்ளது. இங்கு விழுப்புரம் தொடங்கி நாகை வழியாக தூத்துக்குடி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் தலைச்சங்காடு கிராமம் மெயின்ரோட்டில் 2 பகுதிகளிலும் பல ஆண்டுகளாக இருந்த இரண்டு பெரிய குளங்கள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சொந்தமான 2 கட்டிடங்கள், பழமை வாய்ந்த 3 கோவில்கள், சுடுகாடு உள்ளிட்டவைகள் அழிக்கப்பட்டு சாலை போடப்பட உள்ளது.

மாற்று வழியில் அமைக்க வேண்டும்

மேலும் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் வீடுகளும் இடிக்கப்பட உள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு கிராம மக்கள் சார்பில் பலமுறை மனு கொடுத்துள்ளோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தேசிய நெடுஞ்சாலையை மாற்று வழியில் அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story