மன்னார்குடி அருகே மதுக்கடையை உடைத்து கொள்ளை முயற்சி
மன்னார்குடி அருகே மதுக்கடையை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஆசாமிகள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கீழநாகையில் அரசு மதுக்கடை உள்ளது. நேற்று அதிகாலை இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுக்கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அருகே சென்று பார்த்தனர். அப்போது மதுக்கடை பூட்டு உடைக்கப்பட்டு கிடந்த நிலையில் கடையில் பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை.
கொள்ளை முயற்சி
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த நிலையில் போலீசார் ரோந்து வாகனத்தில் தூரத்தில் வருவதை கண்டதும் அப்படியே போட்டுவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆசாமிகளை தேடி வருகிறார்கள். மதுக்கடை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story