மாவட்ட செய்திகள்

அறந்தாங்கி அருகே ஈட்டியால் குத்தி பெயிண்டர் கொலை அண்ணன் உள்பட 3 பேர் கைது + "||" + Three people have been arrested, including the brother who killed the painter by stabbing him with a spear near Aranthangi

அறந்தாங்கி அருகே ஈட்டியால் குத்தி பெயிண்டர் கொலை அண்ணன் உள்பட 3 பேர் கைது

அறந்தாங்கி அருகே ஈட்டியால் குத்தி பெயிண்டர் கொலை அண்ணன் உள்பட 3 பேர் கைது
அறந்தாங்கி அருகே குடும்ப பிரச்சினையில் பெயிண்டர் ஈட்டியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய அண்ணன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கூகனூரை சேர்ந்தவர் பாலையா (வயது 45). இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். பாலையா பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். பாலையாவிற்கும், அவருடைய அண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


கொலை

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலையா குடும்பத்துடன் தனது வீட்டில் இருந்தார். நள்ளிரவில் அவருடைய வீட்டிற்கு வந்த அவருடைய அண்ணன் சுப்பிரமணி (57), இவருடைய மகன் விக்னேஷ் (28), பாலையாவின் தம்பியினுடைய மருமகனான கொடிவேல் கிராமத்தை சேர்ந்த வீரமணி (30) ஆகியோர், பாலையாவிடம் குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றியதில் அவர்கள் ஈட்டியால் பாலையாவின் கழுத்தில் குத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பாலையாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் குடும்ப பிரச்சினை காரணமாக பாலையா கொலை செய்யப்பட்டது, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாலையாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

3 பேர் கைது

மேலும் இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி, விக்னேஷ், வீரமணி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சீர்காழி அருகே தாயை கொன்று வீட்டின் முன்பு புதைத்த தொழிலாளி கைது
சீர்காழி அருகே மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி தன்னை பெற்ற தாயை கொன்று வீட்டின் முன்பு புதைத்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
2. மனைவியிடம் ரூ.1 லட்சம் பறிக்க கடத்தல் நாடகமாடிய கார் டிரைவர் கைது
மனைவியிடம் ரூ.1 லட்சம் பறிக்க கடத்தல் நாடகமாடிய வாடகை கார் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. ஆண்டிமடம் அருகே பரிதாபம்: விவசாய நிலத்தில் மின்வேலியை மிதித்த பெண் சாவு விவசாயி கைது
ஆண்டிமடம் அருகே விவசாய நிலத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்த பெண் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
4. விஜயாப்புராவில் வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
விஜயாப்புராவில் வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது 50 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு.
5. குடிபோதையில் கயிற்றால் கழுத்தை இறுக்கி பெண் கொலை நாடகமாடிய மகன் கைது
பாகல்கோட்டை அருகே குடிபோதையில் கயிற்றால் கழுத்தை இறுக்கி பெண் கொலை செய்யப்பட்டார். நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.