தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் வங்கி மேலாளர், டாக்டர்கள் உள்பட 79 பேருக்கு கொரோனா தொற்று
தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் வங்கி மேலாளர், டாக்டர்கள் உள்பட 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் 79 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி தர்மபுரி ஆவின் நகரைச் சேர்ந்த தனியார் வங்கி மேலாளர், வேப்பமரத்துகொட்டாய் பகுதியை சேர்ந்த பெண் டாக்டர், நல்லம்பள்ளி மின்வாரிய அலுவலக பகுதியை சேர்ந்த டாக்டர் ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் பாலக்கோடு நக்கல்பட்டியைச் சேர்ந்த பெண் போலீஸ், அரூர் தில்லை நகரைச் சேர்ந்த வக்கீல், சாமனூரை சேர்ந்த ஆசிரியை ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி தோக்கம்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரியும் 4 ஊழியர்கள், பொம்மிடி கால்நடை மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர், மோளையனூரை சேர்ந்த மின்வாரிய பெண் ஊழியர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
2,290 ஆக அதிகரிப்பு
இதேபோன்று பாப்பாரப்பட்டி போலீஸ் காலனியை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர், தர்மபுரி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கூட்டுறவு அச்சக ஊழியர் உள்பட மாவட்டம் 79 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து மாவட்டம் முழுவதும் தொற்று பாதிப்பு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2,290 ஆக அதிகரித்துள்ளது.

Related Tags :
Next Story