மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection in 40 more people in Karur district

கரூர் மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று

கரூர் மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று
கரூர் மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரூர்,

கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவின் பிடியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வருகின்றனர். ஆனால் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரிக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


அதன்படி அம்மன்நகரை சேர்ந்த 36 வயது ஆண், காந்திகிராமத்தை சேர்ந்த 45 வயது ஆண், 37 வயது ஆண், 40 வயது ஆண், 26 வயது வாலிபர், 39 வயது பெண், காமராஜபுரத்தை சேர்ந்த 52 வயது ஆண், தாந்தோன்றிமலையை சேர்ந்த 25 வயது வாலிபர், 59 வயது ஆண், 41 வயது பெண்.

வேலாயுதம்பாளையம்

பிள்ளைபுதூரை சேர்ந்த 63 வயது முதியவர், கட்டளையை சேர்ந்த 66 வயது முதியவர், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 46 வயது பெண், ஜெகதாபியை சேர்ந்த 74 வயது முதியவர், 74 வயது மூதாட்டி, புலியூரை சேர்ந்த 43 வயது ஆண், குளித்தலையை சேர்ந்த 82 வயது முதியவர், வாங்கப்பாளையத்தை சேர்ந்த 44 வயது ஆண், வெங்கமேட்டை சேர்ந்த 42 வயது ஆண், அண்ணாசிட்டியை சேர்ந்த 30 வயது ஆண், அரவக்குறிச்சியை சேர்ந்த 65 வயது முதியவர் உள்பட 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்ப் - ஜோ பிடன் இடையே இறுதி கட்ட நேருக்கு நேர் விவாதம்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ சீனாவே காரணம் காரணம் என டிரம்ப் கூறினார்.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 193 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 193 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
3. கர்நாடகத்தில், இதுவரை 70.60 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை சுகாதாரத்துறை தகவல்
கர்நாடகத்தில் இதுவரை 70 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. நடிகர் ஹிருத்திக் ரோசனின் தாய்க்கு கொரோனா
நடிகர் ஹிருத்திக் ரோசனின் தாயார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
5. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 88 சதவீதம் பேர் குணமடைந்தனர்
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 88.10 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர்.