விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா


விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 Sept 2020 9:21 AM IST (Updated: 22 Sept 2020 9:21 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 16 ஆயிரத்து 265 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 14,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 4967 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

13,522 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு சிறப்பு தனிமைப்படுத்தும் மையத்தில் 27 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 113 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

35 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. திருத்தங்கல் பாண்டியன்நகரை சேர்ந்த 50 வயது நபர், 59, 32,59, 32, 40 வயது பெண்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் மஜித்நகரை சேர்ந்த 59 வயது நபர், கோவிந்த்நகரை சேர்ந்த 53 வயது பெண், 58 வயது நபர் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த 63 வயது மூதாட்டி, சீனியாபுரத்தை சேர்ந்த 26 வயது பெண், பாரதிநகரை சேர்ந்த 80 வயது முதியவர், அச்சம்பட்டி, படந்தால், பந்தல்குடி, ரெட்டியப்பட்டி, ஒட்டங்குளத்தை சேர்ந்த 2 பேர், மயியூரநாதபுரம், பெரிய ஓடைப்பட்டி, உப்பத்தூர், புல்வாய்பட்டி, ஆத்திப்பட்டி, வேலாயுதபுரத்தை சேர்ந்த 4 பேர், பரளச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர் பலி

இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 14,985 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்தது.

நேற்று இதுவரை இல்லாத அளவில் 659 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக சராசரியாக 2,000 முதல் 2500 வரை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று வெகுகுறைந்த எண்ணிக்கையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு நிலவரம் தெரிவதிலும் பாதிப்பு ஏற்படும். மேலும் நேற்று முன்தினம் வரை 4,967 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையிலும் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தாமதம் ஆவது நோய் பரவலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுத்தும். மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் அதிக கவனம் செலுத்தி பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story