பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மன்னார்குடியில் நடந்தது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மன்னார்குடியில் நடந்தது
x
தினத்தந்தி 24 Sep 2020 2:46 AM GMT (Updated: 24 Sep 2020 2:46 AM GMT)

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகே ஏ.ஐ.டி.யூ.சி, எல்.பி.எப், சி.ஐ.டி.யூ. மற்றும் ஐ.என்.டி.யூ.சி அடங்கிய மத்திய தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகே ஏ.ஐ.டி.யூ.சி, எல்.பி.எப், சி.ஐ.டி.யூ. மற்றும் ஐ.என்.டி.யூ.சி அடங்கிய மத்திய தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச்செயலாளர் ரகுபதி, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், எல்.பி.எப். மாவட்ட செயலாளர் மகாதேவன், ஐ.என்.டி.யூ.சி மாவட்ட செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஊதிய குறைப்பு, வேலை நீக்கம் செய்வதை கைவிட வேண்டும். கட்டுமான மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு கடந்த ஏப்ரல், மே, ஜூன், மாதங்களுக்கான நிவாரணமாக ரூ.22 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை விளக்கிக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர். இதேகோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி அரசு போக்குவரத்து பணிமனை, பழைய வீட்டு வசதி வாரியம் அருகில் உ ள்ள நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம், மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story