கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக மு.க.ஸ்டாலின் பேச்சு
கரூர் மாவட்ட தி.மு.க.சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், காணொலிக்காட்சி வாயிலாக மு.க.ஸ்டாலின் பேசினார்.
கரூர்,
கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் முப்பெரும் விழாவையொட்டி, மாவட்டத்திற்கு உட்பட்ட 157 ஊராட்சிகளிலும், நகராட்சிகள், பேரூராட்சிகள் என 534 இடங்களில் காணொலிக்காட்சி மூலம் பொதுக்கூட்டம் மற்றும் தி.மு.க.வை சேர்ந்த மூத்த முன்னோடிகள் 100 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கரூர் காமராஜபுரத்தில் அமைந்துள்ள கொங்கு திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான வி.செந்தில் பாலாஜி வரவேற்புரை ஆற்றினார். சென்னையில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், 100 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி, நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
முன்னதாக சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனத்தலைவர் சுபா.வீரபாண்டியர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திட்டங்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்து உரை ஆற்றினார். இதில், மாவட்ட நெசவாளர் அணி மாநிலச்செயலாளர் பரணி மணி, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ராமர், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் சரவணமூர்த்தி, தாந்தோணி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கோயம்பள்ளி பாஸ்கர்,கரூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் குணசேகரன், கரூர் மேற்கு நகரச் பொறுப்பாளர் தாரணி சரவணன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
குளித்தலை
இதேபோல, குளித்தலை சவுண்டீஸ்வரி அம்மன் கோவில்தெருவில் நடைபெற்ற இந்த காணொலிக்காட்சி பொதுக்கூட்டத்திற்கு, குளித்தலை முன்னாள் நகர்மன்ற தலைவரும், தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளருமான பல்லவிராஜா முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல குளித்தலை பெரியபாலம், ரெயில்நிலைய சாலை, பஸ்நிலையம், பகவதிஅம்மன் கோவில்தெரு, சுங்ககேட் மற்றும் மணத்தட்டை ஆகிய பகுதிகளிலும், தி.மு.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

Related Tags :
Next Story