திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் பலி மேலும் 282 பேருக்கு தொற்று உறுதி


திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் பலி மேலும் 282 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 28 Sept 2020 9:41 AM IST (Updated: 28 Sept 2020 9:41 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலன் இன்றி பலியானார்கள். மேலும் 282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்,

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வந்து கொண்டிருக்கிறது. நாள் ஒன்றின் பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்கியே வருகிறது. அதன்படி நேற்று மட்டும் தமிழகத்தில் 5 ஆயிரத்து 791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு கணிசமாக இருந்தது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று மேலும் 282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் அனைவருக்கும் தற்போது மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

மேலும் 8 பேர் பலி

இதனால் திருப்பூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 681 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் நேற்று கொரோனா சிகிச்சை பலன் இன்றி பலியாகியுள்ளனர்.

திருப்பூரை சேர்ந்த 86 வயது ஆண், 67 வயது ஆண், 47 வயது ஆண் மற்றும் 75 வயது பெண் ஆகிய 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பலன் இன்றி நேற்று இவர்கள் பலியாகினர். இதுபோல் திருப்பூர் மாநகரத்தை சேர்ந்த 72 வயது ஆண், 70 வயது ஆண், 74 வயது ஆண், 68 வயது ஆண் ஆகிய 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர்கள் பலியாகினர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. இதில் 26 பெண்கள் அடங்குவர்.

Next Story