வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Sep 2020 12:15 AM GMT (Updated: 30 Sep 2020 12:15 AM GMT)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குளம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பூங்கோதை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். காங்கிரஸ் நகர தலைவர் தங்கசெல்வம், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், வேளாண் மசோதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆலங்குளம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அருமைநாயகம், காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைத்தலைவர் பால்ராஜ், மாநில ஓ.பி.சி. பிரிவு செயலாளர் ஞானபிரகாஷ் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

சிவகிரி

சிவகிரி பஸ் நிலையம் அருகே காந்தி கலையரங்கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வாசுதேவநல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம்.பி. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங் கள் எழுப்பினர். மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் டாக்டர் சுமதி, மாவட்ட துணை செயலாளர் பொன்ராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மருதப்பன், வாசுதேவநல்லூர் ஒன்றிய துணை செயலாளர் மாரித்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ராமசுப்பு, ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் பாலசுப்ரமணியன், பொருளாளர் ராஜேந்திரன் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

புளியங்குடி

புளியங்குடி பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்து சுலைமான் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் சாகுல் ஹமீது, பொதுக்குழு உறுப்பினர் வசந்தம் சுப்பையா, நகர காங்கிரஸ் தலைவர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைத்தலைவர் அப்துர்ரகுமான், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சுரேஷ், ம.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சதன் திருமலைகுமார், நகர செயலாளர் ஜாகீர் உசைன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பஷீர் ஒலி, நகர தலைவர் செய்யது உள்பட அனைத்து கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாட்டு வண்டியில் வந்தனர்.

Next Story