தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு: அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. தனித்தனியாக விசாரணை
தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக, அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். முன்னதாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த வியாபாரி செல்வன் (வயது 32), நிலத்தகராறு காரணமாக காரில் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல் ஆகியோர் உள்பட சிலர் மீது திசையன்விளை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த வழக்கில் திருமணவேலின் உறவினர்களான முத்துராமலிங்கம், சின்னத்துரை ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
தொடர்ந்து அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல், முத்துகிருஷ்ணன், முத்துராமலிங்கம், சின்னத்துரை ஆகிய 4 பேரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 6 நாள் விசாரிக்க கோவில்பட்டி கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து திருமணவேல் உள்ளிட்ட 4 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு நோய் தொற்று, உடலில் வேறு ஏதேனும் காயங்கள் உள்ளதா? உடல்நல பாதிப்புகள் உள்ளதா? என்பதை அறிவதற்காக, அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக நேற்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு திருமணவேல் உள்ளிட்ட 4 பேருக்கும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்கள் 4 பேரையும் மீண்டும் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையிலான போலீசார் தனித்தனியாக விசாரணையை தொடங்கினர்.
வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு
தொடர்ந்து திருமணவேல் உள்ளிட்ட 4 பேரையும் விரைவில் தட்டார்மடம் பகுதிக்கு அழைத்து சென்று, அங்கு வியாபாரி செல்வனை காரில் கடத்தி கொலை செய்ததை நடித்து காண்பிக்க செய்து, அதனை வீடியோவில் பதிவு செய்யவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
மேலும், இதுதொடர்பாக மேலும் சிலரை விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். திருமணவேல் உள்ளிட்ட 4 பேரிடமும் விசாரித்த பின்னர் அவர்களை வருகிற 6-ந் தேதி மாலையில் கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.

Related Tags :
Next Story