குஜராத்தில் இருந்து 5 லாரிகளில் கடத்தி வந்த ரூ.1 கோடியே 80 லட்சம் போதைப்பாக்கு பறிமுதல்
குஜராத்தில் இருந்து 5 லாரிகள் மூலம் கடத்தி வந்த ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பிலான போதைப்பாக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்
தானே,
மராட்டியத்தில் புகையிலை பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வெளிமாநிலத்தில் இருந்து போதைப்பாக்குகள்(குட்கா) தானேவிற்கு கடத்தி கொண்டு வரப்படுவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனர் சிவாஜி தேசாயிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தானே அருகே உள்ள கோட்பந்தர் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்து நிறுத்தி சோதனை போட்டனர். இந்த சோதனையில் லாரிக்குள் மூட்டை, மூட்டையாக போதைப்பாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் 4 லாரிகள்
இந்தநிலையில் அந்த லாரியை பின்தொடர்ந்து வந்த மேலும் 4 லாரிகளின் டிரைவர்கள் போலீசார் சோதனையில் ஈடுபடுவதை அறிந்ததும் லாரியை நடுவழியில் நிறுத்திவிட்டு இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த லாரிகளிலும் ஏறி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அந்த லாரிகளிலும் போதைப்பாக்குகள் கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 5 லாரிகளில் இருந்த போதைப்பாக்கு மூட்டைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பாக்கு மூட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 80 லட்சம் ஆகும். மேலும் லாரியில் இருந்த 4 பேரை பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் குஜராத் மாநிலத்தில் இருந்து போதைப்பாக்குகளை கடத்தி கொண்டு வந்ததும், இந்த கடத்தலில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து காசர்வட்வல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிஓடியவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Tags :
Next Story