திருப்பூரில் தொழில்போட்டி காரணமாக தலையில் கல்லைப்போட்டு பெயிண்டர் கொலை - தொழிலாளி கைது
திருப்பூரில் தொழில் போட்டி காரணமாக தலையில் கல்லை போட்டு பெயிண்டரை கொலைசெய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
திருப்பூர்,
திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 35). பெயிண்டர். இவர் திருமணமாகாத நிலையில் தனது தாய் ஜெயந்தியுடன் வசித்து வந்தார். இவரது வீட்டின் அருகே செல்வம் (46) என்பவர் குடியிருந்து வருகிறார். செல்வமும் பெயிண்டிங் வேலை செய்து வந்த காரணத்தால், தொழில் போட்டி காரணமாக இருவருக்குள்ளும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது மகளை காண ஜெயந்தி சில தினங்களுக்கு முன் சென்னை புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் சுரேஷ்குமார் வீட்டில் தனியாக இருந்தார். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு சுரேஷ்குமார் அதிகளவில் மது குடித்துள்ளார். பின்னர் போதையில் வீட்டின் அருகே ஆடை கலைந்த நிலையில் அவர் கிடந்துள்ளார்.
இதைப்பார்த்த செல்வம் அவரது அருகே சென்று எச்சரிக்கை செய்து வீட்டுக்கு செல்லுமாறு கூறினார். இதனால் சுரேஷ்குமார் கோபம் அடைந்து செல்வத்தை கடுமையாக திட்டினார். இதில் ஆத்திரம் அடைந்த செல்வம் அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து சுரேஷ்குமார் தலையில் தூக்கிப்போட்டு விட்டு, வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் நீண்ட நேரமாகியும் சுரேஷ்குமார் எழுந்திருக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து நேற்று அதிகாலை திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், சுரேஷ்குமாரை மீட்டு திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே சுரேஷ்குமார் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். மேலும், தலையில் கல்லை போட்டு சுரேஷ்குமாரை கொலை செய்த, செல்வத்தை கைது செய்தனர். தொழில்போட்டி காரணமாக தலையில் கல்லைப்போட்டு பெயிண்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story