மாவட்ட செய்திகள்

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் + "||" + Government-aided school teachers series struggle

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் தொடர் போராட்டம்

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் தொடர் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி,

நிலுவையில் உள்ள 10 மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கவேண்டும், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கல்வித்துறை அலுவலக வளாகத்தில் நேற்று 7-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டத்துக்கு அரசு ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் சேஷாச்சலம் தலைமை தாங்கினார். இதில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் ஆல்பர்ட் மார்ட்டின், வின்சென்ட், அந்தோணிசாமி, ஜோசப் பிரிட்டோ, பிரடரிக், வெனிஸ்லகரன், நிக்சன், இருதயராஜ், சேகர், அருள்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: தொழிலாளர் நல ஆணையம் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
மூன்றாவது நாளாக நடைபெறும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு, தொழிலாளர் நல ஆணையம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.
2. வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 12 பேர் கைது
வேலை வாய்ப்பில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம் அங்கன்வாடி ஊழியர்கள் 200 பேர் கைது
திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. ஆவடி பஸ் பணிமனையில் மின்விளக்கு கோபுரத்தில் ஏறிய ஓய்வு பெற்ற கண்டக்டரால் பரபரப்பு
ஆவடி பஸ் பணிமனையில் மின்விளக்கு கோபுரத்தில் மளமளவென ஏறிய ஓய்வு பெற்ற கண்டக்டரை போக்குவரத்து தொழிலாளர்களுடன் சேர்ந்து போலீசார் பத்திரமாக மீட்டனர்.
5. கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 210 பேர் கைது செய்யப்பட்டனர்.