ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 Oct 2020 1:49 AM IST (Updated: 21 Oct 2020 1:49 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

ஈரோடு,

கொரோனா பரவல் தமிழகத்தில் மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அதிக வீரியத்துடன் பரவி வந்த கொரோனா தொற்று கடந்த 4 நாட்களாக குறைய தொடங்கி இருக்கிறது. நேற்று மாலை வெளியிடப்பட்ட மாநில சுகாதாரத்துறை பட்டியிலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 290 ஆக உயர்ந்தது.

இதேபோல் கொரோனாவில் இருந்து நேற்று ஒரே நாளில் 134 பேர் குணமடைந்தார்கள். இதுவரை மொத்தம் 8 ஆயிரத்து 246 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள்.

குறைகிறது

தினமும் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வந்தார்கள். தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை விட குறைந்துவிட்டது. இதுவரை 931 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை 113 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story