சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.44½ லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.44½ லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Oct 2020 4:15 AM IST (Updated: 21 Oct 2020 4:15 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.44 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 842 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் சிவகங்கையைச் சேர்ந்த சையத் முகமது புகாரி (வயது 51), ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையத் அலி (37) ஆகியோர் வந்தனர்.

அவர்கள் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், இருவரது உடைமைகளையும் சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து 2 பேரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

ரூ.44½ லட்சம் தங்கம்

அதில் 2 பேரும் தங்களது உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.44 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 842 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மேலும் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story